/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/12 குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு:குடிக்க தண்ணீர் கிடைக்காத பரிதாபம்12 குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு:குடிக்க தண்ணீர் கிடைக்காத பரிதாபம்
12 குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு:குடிக்க தண்ணீர் கிடைக்காத பரிதாபம்
12 குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு:குடிக்க தண்ணீர் கிடைக்காத பரிதாபம்
12 குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு:குடிக்க தண்ணீர் கிடைக்காத பரிதாபம்
ADDED : ஆக 30, 2011 12:33 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, ஊராட்சி உறுப்பினர் உட்பட 12 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளதால், அவர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
கமுதி வல்லந்தை ஊராட்சி மீட்டாங்குளத்தை சேர்ந்தவர் ராஜகோபால், 57. இவர் இதே ஊராட்சியின் வார்டு உறுப்பினர். மீட்டாங்குளம் கோயிலில் சுவாமி கும்பிடுவது உள்ளிட்ட சில பிரச்னைகளில் தலையிட்டதால், இவர் உட்பட இவரது உறவினர்களின் 12 குடும்பத்தினரை மீட்டாங்குளம் கிராமத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். அவர் கூறியதாவது: கோயிலில் வரி வசூல் செய்தது, கண்மாய் மரம் வெட்டியதை தடுத்தது போன்ற காரணங்களால் எனது குடும்பத்தினரை கடந்த ஒரு மாதமாக ஒதுக்கிவைத்துள்ளனர். குடிநீர் கூட கிடைக்காமல் சிரமப்படுகிறோம். பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஊரில் சேர்த்து கொள்ளவில்லை, என்றார்.ஊராட்சி தலைவர் பால்ச்சாமி கூறியதாவது: ஒரே சமுதாயத்தை சேர்ந்த அவர்களிடம் பேசி பார்த்தும் பயனில்லை. தாசில்தார், டி.எஸ்.பி., ஆகியோரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, என்றார்.கமுதி தாசில்தார் சுகுமாறனிடம் கேட்டபோது, ''ஊரை ஒதுக்கி வைத்துள்ளது குறித்து புகார் வந்துள்ளது. விசாரித்து சமாதானக் கூட்டம் நடத்த உள்ளோம், என்றார்.


