Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/வெடி வைத்து தகர்த்த வீட்டில் தடய அறிவியல் குழு ஆய்வு

வெடி வைத்து தகர்த்த வீட்டில் தடய அறிவியல் குழு ஆய்வு

வெடி வைத்து தகர்த்த வீட்டில் தடய அறிவியல் குழு ஆய்வு

வெடி வைத்து தகர்த்த வீட்டில் தடய அறிவியல் குழு ஆய்வு

ADDED : செப் 06, 2011 01:20 AM


Google News
ஆத்தூர் : ஆத்தூர் அருகே, முன் விரோதம் காரணமாக, வீட்டு சுவரில் வெடி வைத்த சம்பவம் குறித்து, தடய அறிவியல் குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆத்தூர் அருகே, உள்ள நரசிங்கபுரம் நகராட்சி, 3வது வார்டு பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் தேங்காய் வியாபாரி அர்ஜுனன். அவரது தம்பி அங்கமுத்து மகன் வேல்முருகன். இவர்களுக்குள் சில ஆண்டுகளாக, நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில், வேல்முருகன், அர்ஜுனனின் கான்கிரீட் வீட்டு சுவரினுள் 'டெட்டனேட்டர்' பொருத்தி வெடிக்க செய்தார். அதில், அர்ஜுனனின் வீட்டில் இருந்த ஃபோன், 'டிவி' உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து சேலம் மாவட்ட எஸ்.பி., மயில்வாகனன், ஆத்தூர் டி.எஸ்.பி., மாணிக்கம், இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன் உள்ளிட்ட போலீஸார் நேரில் ஆய்வு செய்து, விசாரித்தனர். ஆத்தூர் போலீஸார், வேல்முருகன் (30) மீது, கொலை முயற்சி, முறைகேடாக வெடி பொருட்கள் பயன்படுத்தி சேதம் ஏற்படுத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். விசாரணையில், வேல்முருகனின் தம்பி செந்தில்குமார் என்பவர் மகாராஷ்டிராவில் போர்வெல் லாரியில் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருவதும், அங்கிருந்து 'டெட்டனேட்டர்' எடுத்து வந்து அர்ஜுனன் வீட்டிற்கு வெடி வைத்ததும் தெரியவந்தது. அதையடுத்து, தலைமறைவான செந்தில்குமாரை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். இதனிடையே, நேற்று சேலம் தட அறிவியல் நிபுணர் குழுவினர், வெடி விபத்து ஏற்பட்ட வீட்டினுள் ஆய்வு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us