ADDED : செப் 07, 2011 12:26 AM
ஆனைமலை : ஆனைமலை அருகே நா.மு.சுங்கம் ராமு கலை அறிவியல் கல்லூரியில்
பெற்றோர் ஆசிரியர் கழக கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கல்லூரியின் முதல்வர்
ஒன்னமாரண்ணன் வரவேற்றார்.நிர்வாக இயக்குநர் நித்தியானந்தம் பேசும்போது,
மாணவர்களுக்கு பெற்றோர்கள் மொபைல்போன் தருவதை தவிர்க்க வேண்டும்.
மாணவர்களின் வருகை, நன்னடத்தை செயல்பாடுகள் மற்றும் கல்வித்தரம் குறித்து
மாதம் ஒருமுறை தெரிந்து கொள்ள வேண்டும். மாதம் ஒரு முறை நடைபெறும் பெற்றோர்
ஆசிரியர் கழக கலந்தாய்வில் கலந்து கொள்ளவேண்டும் என்றார். பெற்றோர்களின்
கேள்விகளுக்கு ஆசிரியர்கள் பதிலளித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக
ஒருங்கிணைப்பாளர் சபரிநாதன் நன்றி கூறினார்.


