ADDED : செப் 09, 2011 11:59 PM
திருத்தணி : சாலையோரம், மரப்பட்டறையில் அமர்ந்திருந்த ஒருவர், பஸ் மோதி இறந்தார்.
படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மற்றொருவர், நேற்று காலை இறந்தார்.
ஆந்திர மாநிலம், நகரி மண்டலம், சின்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40, கூலித் தொழிலாளி.
இவரும் இவரது நண்பர் புஜிங்கமும், 32, இரு நாட்களுக்கு முன் திருத்தணிக்கு வந்து, அரசு போக்குவரத்து பணிமனை அருகேயுள்ள மரப்பட்டறைக்குச் சென்றனர்.
அங்கு, சாலை ஓரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அரக்கோணத்திலிருந்து திருத்தணி நோக்கி வந்த, தடம் எண் 2, அரசு டவுன் பஸ், திடீரென இருவர் மீதும் மோதியது. இதில், வெங்கடேசன்,40, அதே இடத்தில் இறந்தார்.
படுகாயமடைந்த புஜிங்சென்னை அரசு பொது மருத்துவமனையில் நேற்று காலை இறந்தார்.


