Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி

ADDED : செப் 07, 2011 12:17 AM


Google News
அன்னூர் : அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் நாராயணசாமி தலைமை வகித்து, ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினார்.

முன்னிலை வகித்த தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் பேசுகையில்,''சமுதாயத்தில் உள்ள பணிகளில் முதன்மையானது ஆசிரியர் பணி. சமுதாயத்தில் நல்ல குடிமகன்களை உருவாக்கவும், மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லவும் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்போது, அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிக்கு இணையாக வகுப்பறைகளுடன், கம்ப்யூட்டர், விசிடி., உள்ளிட்ட நவீன உபகரணங்களைக் கொண்டு கற்பிக்கப்படுகின்றன,'' என்றார். இப்பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், சில பாடங்களில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அப்பாடங்களுக்கான ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். உதவி தலைமை ஆசிரியை ராசாமணி உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us