
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி: மக்களுக்கு அதிகபட்சம் கேடு விளைவிக்கும் மதுவை ஒழிப்பதற்கு நடவடிக்கை இல்லை.
தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி: ஜனநாயகம் என்பது இரு வேறு கருத்துக்களுக்கு பரிமாற்றம் இருக்க வேண்டும். ஆனால், சர்வாதிகாரத்தில் தான் ஒரே குரலில் வாழ்க என்றிருக்கும். சட்டசபை ஒரு சர்வாதிகார பாணியில் நடக்கிறதே தவிர, ஜனநாயக பாணியில் நடக்கவில்லை.
பா.ஜ., தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: மத்தியில் காங்கிரஸ் அரசு செயலிழந்து விட்டது. எந்த முடிவையும் உடனடியாகவும், உறுதியாகவும் எடுக்க முடியாமல் திறனிழந்து திண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், சட்டம்-ஒழுங்கு சீர்குலையும். மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்.
இ.கம்யூ., தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் நல்லகண்ணு பேட்டி: அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து உள்ளாட்சித் தேர்தலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சந்திக்கும். கடந்த தேர்தலை விட, அதிக இடங்களை, அ.தி.மு.க., தலைமையிடம் கேட்டு பெறுவோம்.
முன்னாள் எம்.பி., இரா.செழியன் பேச்சு: மகாத்மா காந்தி, நேருவின் வாழ்க்கையை மாணவர்கள் முன்னுதாரணமாக எடுக்க வேண்டும். கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன், நாட்டில் இருந்த தலைவர்கள் பெரும்பாலும், அரசியல் ஒழுக்கத்தை தலையாய கடமையாக கருதினர்.
சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் பேட்டி: பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், அலுவலர் பணியிடங்களை நிரப்ப, ஆட்சி மன்றக் குழு அனுமதி அளித்துள்ளது. மூன்று மாதத்தில் புதிய நியமனங்களைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.


