/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வாராந்திர குறைகேட்பு: 532 பேர் மனு வழங்கல்வாராந்திர குறைகேட்பு: 532 பேர் மனு வழங்கல்
வாராந்திர குறைகேட்பு: 532 பேர் மனு வழங்கல்
வாராந்திர குறைகேட்பு: 532 பேர் மனு வழங்கல்
வாராந்திர குறைகேட்பு: 532 பேர் மனு வழங்கல்
ADDED : ஆக 02, 2011 12:54 AM
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர
குறைகேட்பு கூட்டத்தில் 532 பேர் மனு கொடுத்தனர்.விழுப்புரம் கலெக்டர்
அலுவலகத்தில் நடந்த வாராந்திர குறைகேட்பு கூட்டம் கலெக்டர் மணிமேகலை தலைமை
தாங்கினார்.
டி.ஆர்.ஓ., வெங்கடாஜலம், மகளிர் திட்ட அலுவலர் பத்மாவதி,
மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் ராஜாத்தி, கலால் உதவி ஆணையர் தனபால்,
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வடிவேலு உட் பட பலர் கலந்து
கொண்டனர்.முதியோர் உதவித் தொகை, ரேஷன் கார்டு, பட்டா மாற்றம் போன்ற
கோரிக்கைகளுக்கு 532 பேர் மனு கொடுத்தனர். முதியோர் உதவித் தொகை உத்தரவு 2
பேருக்கும், நலிவடைந்த கலைஞர்கள் இருவருக்கு நிலுவைத் தொகை தலா 8000 ரூபாய்
காசோலை, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து விபத்து உதவித் தொகை 50 ஆயிரம்
ரூபாய் காசோலை ஒருவருக்கும் கலெக்டர் மணிமேகலை வழங்கினார்.