அறிவியல் ஆயிரம்
வெளியே வராத தங்கம்
இந்தியர்கள், குறிப்பாக தென் மாநிலத்தவர்கள், அதிலும் குறிப்பாக தமிழர்கள் தங்க நகைகளில் தங்கள் சேமிப்பை முதலீடு செய்வதில் வல்லவர் களாக உள்ளனர்.
தகவல் சுரங்கம்
காணாமல் போன இசை
கர்நாடக இசையில், பக்கவாத்தியங்களுள் ஒன்றாக கடம் இடம் பெற்றிருக்கும். அத்தகைய கடம் இன்று கர்நாடக இசையில் இருந்து மறைந்து விட்டது. ஏனெனில் கடம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை இன்று குறைந்து விட்டது.பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு சன்மானம் குறைவு, அதிலும் கடம் வாசிப்பவர்களுக்கு மிகக் குறைந்தே சன்மானம் வழங்கப்படும். மண்ணால் செய்யப்பட்ட கடத்தை இசைக்கச்சேரிகளுக்குச் செல்லும் போது மிகவும் கவனமாக உடையாமல் கொண்டு செல்ல வேண்டும். இசைக்கச்சேரிகளின் போது கடம் உடைவது அந்த ஊருக்கே அபசகுண மாக கருதப்படுவதால் கடம் வாசிப்பவர்கள் கவனமாக வாசிக்க வேண்டும். 'ஓங்கி தட்டினால் உடையும். மெதுவாக தட்டினால் கச்சேரி களைகட்டாது' என கடத்தைப் பற்றிக் கூறுவர். கடம் கலைஞர் விநாயக் ராம் கிராமி விருது வாங்கி கடத்தின் புகழை சர்வதேச அளவில் பரப்பினார். கடம் வாசிக்கவும், கற்றுத் தரவும் இன்று ஆள் இல்லை. கடம் தயாரிப்பில் முன்னணியில் இருந்த மானாமதுரையில், இன்று கடம் காணாமல் போய் விட்டது.