/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/மக்களை அலைக்கழிக்கும் ஆர்.டி.ஓ., ஆஃபீஸ்மக்களை அலைக்கழிக்கும் ஆர்.டி.ஓ., ஆஃபீஸ்
மக்களை அலைக்கழிக்கும் ஆர்.டி.ஓ., ஆஃபீஸ்
மக்களை அலைக்கழிக்கும் ஆர்.டி.ஓ., ஆஃபீஸ்
மக்களை அலைக்கழிக்கும் ஆர்.டி.ஓ., ஆஃபீஸ்
ADDED : ஆக 06, 2011 02:03 AM
புதுக்கோட்டை : புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குச் (ஆர்.டி.ஓ.,) செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் ஆகியோர் மிகவும் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதியதாக டூவீலர், கார் லைசென்ஸ் எடுக்கவும், புதிய வாகனங்களை பதிவு செய்யவும், வாகன பெயர் மாற்றவும், வெளி மாநிலங்களுக்கு டூர் செல்ல பர்மிட் வாங்கவும் என பல்வேறு பணிகளுக்காக பலர் புதுகை ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு வருகின்றனர். இங்கு முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்களாகவே சென்று எல்.எல்.ஆர்., மற்றும் லைசென்ஸ், வாகன பதிவு ஆகியவற்றிற்கு சென்றால் அங்கு யாரிடம் விபரம் கேட்க வேண்டும்? என்று தெரிவதில்லை. அங்கு யார் அரசு அலுவலர்கள், டிரைவிங் ஸ்கூல் ஏஜன்ட்கள், லைசென்ஸ் எடுத்துக்கொடுக்கும் ஏஜன்ட் என விபரமாக தெரிவதில்லை. இதனால் பலர் அங்கு இருக்கும் ஏஜன்ட்களிடம் மாட்டிக்கொண்டு எல்.எல்.ஆர்., லைசென்ஸ், வாகன பதிவு போன்வற்றிற்கு அதிகமான தொகை கொடுத்து அதாவது அரசு பதிவு கட்டணத்தை விட அதிகமாக கொடுக்க வேண்டியுள்ளது. அங்குள்ள அதிகாரிகள் அலுவலகம் வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை விட, டிரைவிங் ஸ்கூல் ஏஜன்ட், இதர ஏஜன்ட்களுக்கு ராஜமரியாதை கொடுத்து அவர்கள் வேலைகளை முதலில் செய்து கொடுக்கின்றனர். சமீபத்தில் லைசென்ஸ் எடுக்க சென்ற பாலமுருகன் கூறியதாவது: நான் டூவீலர் மற்றும் கார் ஓட்ட லைசென்ஸ் எடுக்க சென்றேன். இதுபற்றி அதிகாரிகளிடம் விபரம் கேட்டேன். சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் அங்கு உள்ள ஏஜன்ட்களிடம் 3,000 பணம் கொடுத்து தற்போது லைசென்ஸ் வாங்கியுள்ளேன். இவ்வாறு ஏஜன்ட்கள் மூலம் சென்றால் டிரைவிங் டெஸ்ட்டில் ஈசியாக பாஸ் செய்துவிடலாம். நம் தனியாக அலுவலகத்தில் சென்று டிரைவிங் டெஸ்டுக்குச் சென்றால் பல வழிமுறைகள் கூறி நம்மை பெயிலாக்கி விடுவார்கள். புதிய வாகனங்கள் பதிவுக்கு ஏஜன்ட் மூலம் சென்றால் இரண்டு நாட்களில் ஆர்.சி., புக் கைக்கு வந்துவிடும். தானாக நாம் மட்டும் சென்று வாகன பதிவு செய்தால் ஆர்.சி., புக் வாங்க பல நாட்களாகி விடும். எல்லாம் வைட்டமின் 'ப' இருந்தால் மட்டுமே அங்கு வேலைகள் நடக்கும். இல்லையெனில் நாம் அந்த அலுவலகத்திற்கு பல நாள் நடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து வட்டார உயர் அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.