/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கெரசின் அளவு குறைப்பு ரேஷன் ஊழியர்கள் திணறல்கெரசின் அளவு குறைப்பு ரேஷன் ஊழியர்கள் திணறல்
கெரசின் அளவு குறைப்பு ரேஷன் ஊழியர்கள் திணறல்
கெரசின் அளவு குறைப்பு ரேஷன் ஊழியர்கள் திணறல்
கெரசின் அளவு குறைப்பு ரேஷன் ஊழியர்கள் திணறல்
ADDED : ஜூலை 13, 2011 03:02 AM
திண்டுக்கல்: கடந்த மாதம் 180 கிலோ, இந்த மாதம் 100 கிலோ என,
மாவட்டங்களுக்கான மண்ணெண்ணெய் வினியோகம் குறைந்து வருகிறது.
இதனால்,
கார்டுதாரர்களுக்கு வழங்க முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் திணறுகின்றனர்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஊராட்சி பகுதியில் 3 லிட்டர் மண்ணெண்ணெய்;
பேரூராட்சி, நகராட்சிகளுக்கு 5 லிட்டர்; மாநகராட்சி, மாவட்ட தலைநகரில் உள்ள
நகராட்சிகளுக்கு 10 லிட்டர் வழங்கப்படுகிறது. இரண்டு காஸ் சிலிண்டர்
உள்ளவர்களுக்கு மண்ணெண்ணெய் கிடையாது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய்
விலை உயர்வு அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு, மாநிலங்களுக்கு
மண்ணெண்ணெய் அளவை குறைத்து வருகிறது. தமிழகத்திற்கு கடந்த மாதம் 1,000 கிலோ
மண்ணெண்ணெய் குறைத்து வழங்கப்பட்டது. இதனால் மாவட்டங்களுக்கான அளவும்
குறைந்து வருகிறது. கடந்த ஜூனில் 180 முதல் 250 கிலோ; இம்மாதம் 100 முதல்
150 கிலோ வரை, வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன்கார்டுதாரர்களுக்கு
வினியோகிக்க முடியவில்லை. கடந்த மாதம் டோக்கன் வாங்கியவர்களுக்கு, இன்னும்
வழங்கப்படவில்லை. டோக்கன் வாங்கியவர்களுக்கு முதலில் வழங்கவும், பிறகு
மற்றவர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலி ரேஷன்கார்டுகளை
குறைத்தால் மட்டுமே, மண்ணெண்ணெய் வினியோகத்தை சீரமைக்க முடியும் என,
அதிகாரிகள் தெரிவித்தனர்.


