Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நில மோசடி வழக்கில் நகராட்சி தலைவர் கைது

நில மோசடி வழக்கில் நகராட்சி தலைவர் கைது

நில மோசடி வழக்கில் நகராட்சி தலைவர் கைது

நில மோசடி வழக்கில் நகராட்சி தலைவர் கைது

ADDED : ஜூலை 13, 2011 03:02 AM


Google News
தாண்டிக்குடி: கொடைக்கானல் நகராட்சி தலைவர் முகமது இப்ராகிம், நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.கொடைக்கானலை சேர்ந்த சேவியர் மைக்கேல், கடந்த மார்ச் 26 ல், டி.ஜி.பி., யிடம் அளித்த புகாரில், 'கோஹினூர் பங்களா அருகே நான்கு ஏக்கர் நிலம் (40 கோடி ரூபாய்), வீட்டை அபகரித்து, சிலர் மிரட்டுகின்றனர்,' என, தெரிவித்திருந்தார்.

தி.மு.க., ஆட்சியில், அந்த புகார் கிடப்பில் போடப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின், நில அபகரிப்பு புகார் குறித்து விசாரிக்க தனி பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேவியர் மைக்கேல் அளித்த புகார் தூசு தட்டப்பட்டது. மேலும், அந்த வீடு சேதப்படுத்தப்பட்டு உரிமையாளர்கள் விரட்டப்பட்டதாக புகார் பதிவானது. இதற்கு உடந்தையாக செயல்பட்டு 'கட்டப்பஞ்சாயத்து' செய்ததாக, கொடைக்கானல் நகராட்சி தலைவரை, நேற்று காலை 6 மணிக்கு, போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக தாண்டிக்குடி ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், மதியம் வரை அங்கு வைக்கப்பட்டிருந்தார். டி.எஸ்.பி., பால்ராஜ், இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தனி அறையில் வைத்து விசாரித்தனர். மதியம் 2 மணிக்கு, நகராட்சி தலைவர், புரோக்கர்கள் தலீப்சிங், சேகர் செபாஸ்டீன் கொடைக்கானல் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.'உஷ்...உஷ்'காலை 6 மணிக்கு லுங்கியுடன் அழைத்து வரப்பட்ட நகராட்சி தலைவரை, தி.மு.க., பிரமுகர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு, ஸ்டேஷன் மூடப்பட்டது. அவர் சார்பில் வக்கீல் மட்டும் அனுமதிக்கப்பட்டார். மதியம், லுங்கியை மாற்ற போலீசார் அனுமதித்தனர். பத்திரிகையாளர்கள் படம் எடுக்க போலீசார் மறுத்த நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது, விசாரணை குறித்து போலீசார் மவுனம் காத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us