Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/குறைதீர்க்கும் கூட்டத்தில் கருணாநிதி படம்

குறைதீர்க்கும் கூட்டத்தில் கருணாநிதி படம்

குறைதீர்க்கும் கூட்டத்தில் கருணாநிதி படம்

குறைதீர்க்கும் கூட்டத்தில் கருணாநிதி படம்

ADDED : ஜூலை 13, 2011 03:58 AM


Google News
மதுரை:மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல குறைதீர்க்கும் கூட்டம், மண்டல அலுவலகத்தின் முதல் தளத்தில் நடந்தது.

கமிஷனர் செபாஸ்டின் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குறைவான மனுக்களே வந்தன. அரசு அலுவலகங்களில், முதல்வர் 'போட்டோ' வைப்பது மரபு. கூட்டம் நடந்த இடத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் படம் வைத்திருந்தனர். முதல்வர் ஜெயலலிதா போட்டோ இல்லை. விசாரித்ததில், ஜெ., படம் வைக்க எதிர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கமிஷனர் செபாஸ்டினிடம் கேட்ட போது, கருணாநிதி படம் இருந்ததை நான் கவனிக்கவில்லை. உடனே அனைத்து மண்டலங்களிலும் விசாரித்து, முதல்வர் படம் வைக்க உத்தரவிடப்படும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us