Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அ.தி.மு.க., அலுவலகத்துக்கு குண்டு மிரட்டல் : மூதாட்டி பெயரில் போலி "சிம்'

அ.தி.மு.க., அலுவலகத்துக்கு குண்டு மிரட்டல் : மூதாட்டி பெயரில் போலி "சிம்'

அ.தி.மு.க., அலுவலகத்துக்கு குண்டு மிரட்டல் : மூதாட்டி பெயரில் போலி "சிம்'

அ.தி.மு.க., அலுவலகத்துக்கு குண்டு மிரட்டல் : மூதாட்டி பெயரில் போலி "சிம்'

ADDED : ஜூலை 19, 2011 10:34 PM


Google News

திண்டுக்கல் : சென்னையில் அ.தி.மு.க., பொதுக்கூட்டங்களில் குண்டு வெடிக்கும் என, போனில் மிரட்டிய நபர், திண்டுக்கல் மூதாட்டி பெயரில் போலி 'சிம் கார்டு' வாங்கியது தெரியவந்துள்ளது.

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு, ஜூலை 17 ம் தேதி, போனில் பேசிய பெண், ''கட்சி கூட்டங்களில் குண்டு வெடிக்கும்,'' என மிரட்டினார். இதுகுறித்து ராயப்பேட்டை உதவி கமிஷனர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஆனந்தக்குமார் விசாரித்தனர். போன் 'காலர் ஐ.டி.,' கருவியில் பதிவான மொபைல் போன் எண், திண்டுக்கல்லை சேர்ந்தது என, தெரிந்தது. இதையடுத்து கூடுதல் எஸ்.பி., சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.



இது குறித்து அவர் கூறியது: மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரித்தோம். பட்டிவீரன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த பாண்டியம்மாள் (65) என்பவரிடம், கடந்த வாரம் ஒரு நபர் வந்துள்ளார். தான் ஊராட்சி அதிகாரி. நூறு நாள் வேலை திட்டத்தில் பெயர் சேர்க்க போட்டோ, ரேஷன் கார்டு வேண்டும் என, கூறியுள்ளார். இதை நம்பி மூதாட்டி கொடுத்துள்ளார். அந்த நபர், பாண்டியம்மாள் பெயரில் ஏர்செல் 'சிம் கார்டு' வாங்கி பேசியுள்ளார். அவர் பேசியது எந்த டவரில் பதிவாகியுள்ளது என்பது குறித்து விசாரிக்கிறோம், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us