/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விபத்தில் 2 வயது குழந்தை பலி : டிரைவருக்கு ஓராண்டு சிறைவிபத்தில் 2 வயது குழந்தை பலி : டிரைவருக்கு ஓராண்டு சிறை
விபத்தில் 2 வயது குழந்தை பலி : டிரைவருக்கு ஓராண்டு சிறை
விபத்தில் 2 வயது குழந்தை பலி : டிரைவருக்கு ஓராண்டு சிறை
விபத்தில் 2 வயது குழந்தை பலி : டிரைவருக்கு ஓராண்டு சிறை
கோவை : விபத்தில் இரண்டு வயது குழந்தை பலியான வழக்கில், வேன் டிரைவருக்கு கோவை கோர்ட் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.கோவை, பூமார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் லலிதா.
இச்சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து, உடையாம்பாளையத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் கிட்டுசாமியை (55) கைது செய்தனர்.இவ்வழக்கு ஜே.எம். எண்:8 கோர்ட்டில் நடந்தது. மாஜிஸ்திரேட் அருணாச்சலம் வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட டிரைவர் கிட்டுசாமிக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.மற்றொரு தீர்ப்பு: கவுண் டம்பாளையத்தைச் சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல்(32); எலக்ட்ரீசியன். 2008, மார்ச் 11 அன்று, உடையாம்பாளையம் ரோட்டில் டூ வீலருடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது தாறுமாறாக வந்த லாரி, நின்று கொண்டிருந்த டூ வீலர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே எலக்ட்ரீசியன் பலியானார்.போலீசார் விசாரித்து, லாரி டிரைவர் கண்ணன்(42)என்பரை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அருணாச்சலம், குற்றம் சாட்டப்பட்ட டிரைவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.