/உள்ளூர் செய்திகள்/கடலூர்/முன்விரோத தகராறில் 5 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம்முன்விரோத தகராறில் 5 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம்
முன்விரோத தகராறில் 5 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம்
முன்விரோத தகராறில் 5 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம்
முன்விரோத தகராறில் 5 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம்
ADDED : ஜூலை 27, 2011 11:12 PM
கடலூர் : முன்விரோத தகராறில் ஒருவரை கத்தியால் வெட்டிய ஐந்து பேருக்கு தலா 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.ரெட்டிச்சாவடி அடுத்த சின்ன இருசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னகுமார்.
இவருக்கும் நல்லப்பரெட்டிப்பாளையம் ஆறுமுகத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பிரசன்னகுமாரை ஆறுமுகம் தனது ஆதரவாளர்கள் ராஜா, ராஜன், அய்யனார், குமார் ஆகியோருடன் சென்று வழிமறித்து கத்தியால் வெட்டினார்.படுகாயமடைந்த பிரசன்னகுமார் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து ஆறுமுகம், ராஜா, ராஜன், அய்யனார், குமார் ஆகியோரை கைது செய்து, மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 2ல் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி சுகந்தி, இவ்வழக்கில் தொடர்புடைய ஆறுமுகம் உட்பட ஐந்து பேருக்கும் தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.