தர்மபுரி: ஒகேனக்கல் சிறுவர் பூங்காவில் அடையாளம் தெரியாத வாலிபர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
ஒகேனக்கல்லில் சிறுவர் பூங்காவில் பயணிகள் அமர போடப்பட்டிருந்த இரும்பு
படுக்கை மீது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்
பிணமாக கிடந்தார்.கறுப்பு கலர் பேண்ட் மட்டும் அணிந்திருந்தார். ஒகேனக்கல்
போலீஸார் பிணத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு
அல்லது அதிகாலை நேரத்தில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார்
சந்தேகிக்கின்றனர். இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற
விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.


