/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/பெரம்பலூர் மாவட்டத்தில் 272 வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்பெரம்பலூர் மாவட்டத்தில் 272 வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
பெரம்பலூர் மாவட்டத்தில் 272 வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
பெரம்பலூர் மாவட்டத்தில் 272 வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
பெரம்பலூர் மாவட்டத்தில் 272 வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
ADDED : ஆக 06, 2011 02:10 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 44 வங்கிகளை சேர்ந்த 272 வங்கி ஊழியர்கள் நேற்று நடந்த ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
பொதுத்துறை வங்கிகளில் அரசுப் பங்குகளை குறைக்கக் கூடாது, பொது மற்றும் தனியார் வங்கிகளின் பங்குதாரர்களின் ஓட்டுரிமை உச்சவரம்பை நீக்கக் கூடாது, பணி நாள்களை 5 நாளாக குறைக்க வேண்டும். வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வங்கி ஊழியர்கள் இறக்க நேர்ந்தால், அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 55 வங்கிகளில், 11 வங்கிகளை சேர்ந்த பணியாளர்கள் பங்கேற்கவில்லை. மீதமுள்ள பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி உள்பட 44 வங்கிகளில் பணிபுரியும் 272 பணியாளர்கள், ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டது.