அன்னா ஹசாரேக்கு குவியும் கடிதங்கள்
அன்னா ஹசாரேக்கு குவியும் கடிதங்கள்
அன்னா ஹசாரேக்கு குவியும் கடிதங்கள்
ADDED : ஆக 28, 2011 09:18 AM
புதுடில்லி : ராம்லீலா மைதானம் பக்கமே செல்லாத டில்லி தபால்காரர்கள் கடந்த ஒரு வாரமாக ராம்லீலா மைதானத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரேவிற்கு வந்த ஆதரவு கடிதங்களை விநியோகம் செய்யவே அவர் ராம்லீலாவிற்கு தினமும் வந்து செல்கின்றனர். வரும் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகள் அன்னா ஹசாரே, உண்ணாவிரத மையம், ராம்லீலா மைதானம் என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளன. அன்னா ஹசாரே, ராம்லீலா மைதானம் என்ற பெயரை பார்த்த உடனேயே தபால்காரர்கள் கடிதங்களை ராம்லீலா மைதானத்திற்கு கொண்டு வந்து சேர்த்து விடுகின்றனர். இதுவரை சுமார் 50 கடிதங்கள் அன்னா ஹசாரேவிற்கு வந்துள்ளதாக அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர். அந்த கடிதங்களில் பெரும்பாலானவை உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவரது உடல்நிலை கருதி போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தும் அனுப்பப்பட்டுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடிதங்கள் பெரும்பாலும் ஒரிசா மற்றும் திரிபுரா மாநிலங்களில் இருந்தே வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


