/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/உழவர் பண்ணை செயல் திட்டம்: அதிகாரி அழைப்புஉழவர் பண்ணை செயல் திட்டம்: அதிகாரி அழைப்பு
உழவர் பண்ணை செயல் திட்டம்: அதிகாரி அழைப்பு
உழவர் பண்ணை செயல் திட்டம்: அதிகாரி அழைப்பு
உழவர் பண்ணை செயல் திட்டம்: அதிகாரி அழைப்பு
ADDED : ஆக 13, 2011 01:00 AM
மோகனூர்: 'சிறு, குறு விவசாயிகளுக்கு, அரசின் திட்டங்களை
அமல்படுத்துவதற்காக உழவர் பண்ணை செயல்திட்டம் தயாரிக்கும் பணி, மோகனூர்
வட்டாரத்தில் நடந்து வருகிறது. இதுவரை அடிப்படை புள்ளி விபரங்களை பதிவு
செய்யாத விவசாயிகள், தங்களது விபரங்களை உடனடியாக பதிவு செய்து பயன்பெறலாம்'
என, மோகனூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் தங்கராஜீ தெரிவித்துள்ளார்.அவர்
வெளியிட்டுள்ள அறிக்கை:சிறு, குறு விவசாயிகளுக்கு உழவர் பண்ணை செயல்
திட்டம் தயாரிக்க வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளிடமும், அடிப்படை
புள்ளி விபரங்கள் சேகரிக்கும் பணி, கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.
இத்திட்டத்தில் இதுவரை அடிப்படை புள்ளி விபரங்கள் பதிவு செய்யாத சிறு, குறு
விவசாயிகள், மோகனூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நேரில் வந்தோ
அல்லது தங்கள் பகுதிக்கு வரும் உதவி வேளாண் அலுவலரிடமோ பதிவு செய்து
கொள்ளலாம்.இப்பதிவின் அடிப்படையில் விவசாயிகளுக்கு அரசு வழங்கும்
மானியத்திட்டம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதால், மோகனூர் வட்டாரத்தில் உள்ள
சிறு, குறு விவசாயிகள் தவறாமல் தங்கள் நிலத்தின் சர்வே எண், பரப்பு,
சாகுபடி பயிர், வங்கி கணக்கு எண் போன்ற விபரங்களுடன் உடனே வந்து பதிவு
செய்து கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


