Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/216 இடங்களில் கால்நடை முகாம்

216 இடங்களில் கால்நடை முகாம்

216 இடங்களில் கால்நடை முகாம்

216 இடங்களில் கால்நடை முகாம்

ADDED : செப் 04, 2011 12:27 AM


Google News

Xஈரோடு: ''மாவட்டத்தில் இந்தாண்டு 216 கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் நடத்த, அரசு 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது,'' என, அமைச்சர் ராமலிங்கம் பேசினார்.

சென்னிமலை யூனியன், கவுண்டச்சிபாளையம் பஞ்சாயத்து வள்ளிபுரத்தான் பாளையத்தில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் துவக்க விழா நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு 216 கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதிக பால் தரக்கூடிய தீவனமான மினி கிட், புல் கரணை, மக்காசோளம் ஆகியவை முகாமில் வழங்கப்படும். விவசாயிகள் அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த முகாமில் பங்கேற்று பயனடைய வேண்டும்.



ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக முதல்வர் ஜெயலலிதா மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இலவச கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளார்.இவ்வாறு அமைச்சர் பேசினார். முகாமில், 350 வெள்ளாடு, 250 செம்மறியாடு, 205 பசுமாடு, 150 எருமை மாடுகள் அழைத்து வரப்பட்டிருந்தன. கால்நடைகளுக்கு, குடற்புழு நீக்கம், தடுப்பூசி, மலடு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், நோய் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கலெக்டர் காமராஜ், கால்நடைத் துறை இணை இயக்குனர் கோபால், பஞ்சாயத்து தலைவர் பாலமணி, டவுன் பஞ்சாயத்து தலைவர் வரதராஜன், யூனியன் கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us