ADDED : ஆக 06, 2011 10:52 PM
திண்டுக்கல்:மாவட்ட சலவைத்தொழிலாளர்கள் சங்க கூட்டம், பாளைமேடு
கிளைத்தலைவர் முருகன் தலைமையில் திண்டுக்கல்லில் நடந்தது.பொதுக்குழு
உறுப்பினர் சங்கர் முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணைத்தலைவர் கருப்பையா
வரவேற்றார்.மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநில செயலாளர் நாகவேல் பேசினர்.
விலைவாசி உயர்வால் சலவை, அயனிங் விலையை உயர்த்துவது;
சலவைத்தொழிலாளர்களுக்கு உள்இடஒதுக்கீடு 5 சதவீதம் வழங்கவேண்டும் என, அரசை
கேட்டுக்கொள்வது, என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள்
தேர்வு செய்யப்பட்டனர். பொருளாளர் அன்னர் நன்றி கூறினார்.


