தி.மு.க., மாஜி அமைச்சருக்கு ஐகோர்ட் கிளை முன்ஜாமின்
தி.மு.க., மாஜி அமைச்சருக்கு ஐகோர்ட் கிளை முன்ஜாமின்
தி.மு.க., மாஜி அமைச்சருக்கு ஐகோர்ட் கிளை முன்ஜாமின்
ADDED : செப் 07, 2011 11:32 PM
மதுரை: நாகர்கோவில் வடசேரி அருகே, வனப் பகுதியிலுள்ள இடத்தை அனுமதியின்றி விற்றதாக பதிவான மோசடி வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உட்பட இருவருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை, முன்ஜாமின் வழங்கியது.
நாகர்கோவில், தாம்சன் தெருவைச் சேர்ந்தவர் தயாபாக்ய சிங். இவருக்கு, வனப் பகுதியிலுள்ள இடத்தை விற்று மோசடியில் ஈடுபட்டதாக, சுரேஷ்ராஜன், ஜி.எம்.ஷா உட்பட சிலர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி, இவர்கள் ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். மனு நேற்று, நீதிபதி ஆர்.மாலா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் பிரபு ராஜ துரை ஆஜரானார். அரசு கூடுதல் வழக்கறிஞர் ராமர் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும், இருவருக்கும் முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். குற்றச்சாட்டு குறித்து ஓராண்டு கழித்து புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது சிவில் பிரச்னை. எனவே, மனுதாரர்களுக்கு முன்ஜாமின் வழங்கப்படுவதாகவும், நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.


