ADDED : ஜூலை 24, 2011 12:14 AM
புதுச்சேரி : வில்லியனூர் ஆச்சார்யா கல்லூரியின் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் திருக்காஞ்சி கிராமத்தில் நடந்தது.
ஆச்சார்யா கல்விக்குழும மேலாண் இயக்குனர் அரவிந்தன் தலைமை தாங்கினார்.
என்.எஸ். எஸ்., மாநில இணைப்பு அலுவலர் ராஜன் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் குமுதா, ஆண்டியார்பாளையம் கிராமத் தலைவர் பாலபாஸ்கர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.