/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/வேதை கடற்கரையில் முதியவர் மர்மச்சாவுவேதை கடற்கரையில் முதியவர் மர்மச்சாவு
வேதை கடற்கரையில் முதியவர் மர்மச்சாவு
வேதை கடற்கரையில் முதியவர் மர்மச்சாவு
வேதை கடற்கரையில் முதியவர் மர்மச்சாவு
ADDED : செப் 16, 2011 12:00 AM
வேதாரண்யம்: வேதாரண்யம் கடற்கரையில் அழுகிய நிலையில் கிடந்த முதியவர் மரணம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரன் இருப்பு கடற்கரை பகுதியில், அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் உடல் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற வேட்டைக்காரன் இருப்பு போலீஸார், உடலை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர், வேட்டைக்காரன் இருப்பை சேர்ந்த கருணாநிதி (50) என்பது தெரியவந்தது. உடல் அழுகிய நிலையில் மீன்களால் குதறப்பட்டு இருந்ததால், கருணாநிதி அடித்துக் கொல்லப்பட்டரா? அல்லது இயற்கையான முறையில் மரணமடைந்தாரா? என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.


