Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இனி, அவிநாசி வட்டாரத்தில் "மதுரை' ஆட்சி

இனி, அவிநாசி வட்டாரத்தில் "மதுரை' ஆட்சி

இனி, அவிநாசி வட்டாரத்தில் "மதுரை' ஆட்சி

இனி, அவிநாசி வட்டாரத்தில் "மதுரை' ஆட்சி

ADDED : செப் 16, 2011 01:33 AM


Google News
அவிநாசி:அவிநாசி ஒன்றியம், பேரூராட்சி தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகள், இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சி

நிர்வாகத்தில் பெண்களின் கை ஓங்கியுள்ளது.அவிநாசி ஊராட்சி ஒன்றிய தலை வர், பேரூராட்சி தலைவர்ஆகியன பெண்களுக்கும் (பொது), தெற்கு ஒன்றிய மாவட்ட ஊராட்சி வார்டு எஸ்.சி.,க்கும் (பெண்) ஒதுக்கப்பட்டது. இதைத்தவிர, 11 ஊராட்சி கள், ஏழு ஒன்றிய கவுன்சிலர்கள், தெற்கு ஒன்றிய வார்டும் பெண்

களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவிநாசி வட்டாரத்தில் அதிகளவில் பெண்கள் பதவிக்கு வருவதால், ஆண்கள் புலம்பி

வருகின்றனர்.அவிநாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளில் இட ஒதுக்கீடு விவரம்:எஸ்.சி., (பெண்) - மங்கரசுவலையபாளையம், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டாம்பாளையம்.எஸ்.சி., (பொது) - கருமாபாளையம், புதுப்பாளையம், புலிப்பார், துலுக்கமுத்தூர்.

பெண்கள் (பொது) - ஆலத்தூர், அய்யம்பாளையம், சேவூர், வேட்டுவபாளையம், வடுகபாளையம், நடுவச்சேரி, தத்தனூர் மற்றும் புஞ்சை தாமரைக்குளம்.பொது: சின்னேரிபாளையம், கானூர், கருவலூர், குட்டகம், பாப்பாங்குளம், பொங்கலூர், போத்தம்பாளையம், கணியாம்பூண்டி, ராமநாதபுரம், குப்பாண்டாம்பாளையம், தெக்கலூர், உப்பிலிபாளையம், வேலாயுதம்பாளையம், நம்பியாம்பாளையம் மற்றும் பழங்கரை.ஒன்றிய வார்டுகளில் உள்ள இட ஒதுக்கீடு (வார்டு எண்):எஸ்.சி., பெண் - முறியாண்டாம் பாளையம் (வார்டு எண் - 9 ), சேவூர் (வார்டு-7). எஸ்.சி., (பொது) - சின்னேரிபாளையம், நடுவச்சேரி, கருமாபாளையம் (வார்டு -12), ஆலத்தூர் (ஊராட்சி வார்டு 5,8,9), கானூர் (வார்டு -2), வேட்டுவபாளையம், செம்பியநல்லூர் (வார்டு -11).பெண் (பொது): அய்யம்பாளை யம், துலுக்கமுத்தூர், குப்பாண்டம்பாளையம், பழங்கரை (ஊராட்சி வார்டு 1,2) (வார்டு 13), பாப்பாங்குளம், போத்தம்பாளையம் (வார்டு 6), புஞ்சை தாமரைக்குளம் , வடுகபாளையம் (வார்டு 5), புலிப்பார், தத்தனூர் (வார்டு 4). நம்பியாம்பாளையம் (வார்டு 17).பொது: தண்டுக்காரன்பாளையம் (வார்டு 18), பழங்கரை (ஊராட்சி வார்டு 3 முதல் 12 வரை) (வார்டு 14), ராமநாதபுரம், உப்பிலிபாளையம் (வார்டு 10), கருவலூர் (வார்டு 18), பொங்கலூர், ஆலத்தூர் (ஊராட்சி வார்டு 1,2,3,4,6 மற்றும் 7 வரை) (வார்டு 1), மங்கரசவலைய பாளையம் , குட்டகம் (வார்டு 3). தெக்கலூர் (வார்டு 19), புதுப்பாளையம், கணியாம்பூண்டி (வார்டு 16), வேலாயுதம்பாளையம் (வார்டு 15).இவை தவிர திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்கு, அவிநாசி ஒன்றியத்தில், அவிநாசி வடக்கு, தெற்கு என இரு மாவட்ட வார்டுகள் உள்ளன. இதில், வடக்கு ஒன்றியம் எஸ்.சி., பொதுவுக்கும், தெற்கு ஒன்றியம் எஸ்.சி., பெண் களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us