/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/களக்காடு அருகே நள்ளிரவில் தீ விபத்து 3கடைகள் எரிந்து சாம்பல்; 2ஆடுகள் பலிகளக்காடு அருகே நள்ளிரவில் தீ விபத்து 3கடைகள் எரிந்து சாம்பல்; 2ஆடுகள் பலி
களக்காடு அருகே நள்ளிரவில் தீ விபத்து 3கடைகள் எரிந்து சாம்பல்; 2ஆடுகள் பலி
களக்காடு அருகே நள்ளிரவில் தீ விபத்து 3கடைகள் எரிந்து சாம்பல்; 2ஆடுகள் பலி
களக்காடு அருகே நள்ளிரவில் தீ விபத்து 3கடைகள் எரிந்து சாம்பல்; 2ஆடுகள் பலி
ADDED : ஜூலை 24, 2011 01:42 AM
களக்காடு : களக்காடு அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து சாம்பலானதோடு, 2 ஆடுகள் தீயில் கருகி பலியாகின.களக்காடு, நினைத்ததை முடித்த விநாயகர் கோயில் அருகில் மஞ்சூரை சேர்ந்த மூக்கையா என்பவர் பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென மூக்கையாவின் கடை தீ பிடித்து எரிந்தது.இது குறித்து கடையின் உரிமையாளர் நான்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நான்குநேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலானது. காற்று பலமாக வீசியதால், மூக்கையா இரும்பு கடையின் அருகில் உள்ள பால்பாண்டியின் இறைச்சிக்கடையும், பெருமாள் என்பவரின் தச்சுபட்டறையும் எரிந்து சாம்பலானது. மேலும் இறைச்சிக் கடையில் கட்டப்பட்டிருந்த 2 ஆடுகள் கருகி பலியானது. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.இது குறித்து களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.