/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரயில்வே பாதுகாப்பு படையினர் திடீர் ஆய்வுரயில்வே பாதுகாப்பு படையினர் திடீர் ஆய்வு
ரயில்வே பாதுகாப்பு படையினர் திடீர் ஆய்வு
ரயில்வே பாதுகாப்பு படையினர் திடீர் ஆய்வு
ரயில்வே பாதுகாப்பு படையினர் திடீர் ஆய்வு
ADDED : செப் 07, 2011 01:50 AM
ஈரோடு: ரயில்வே பாதுகாப்பு படை சார்பில், நேற்று ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் குற்றத்தடுப்பு திடீர் சோதனை நடந்தது.
ஒரே நாளில், 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், டிக்கெட் இல்லாமல் பயணிப்பது, ரேஷன் அரிசி உள்பட பொருட்களை கடத்துவது, தடை விதிக்கப்பட்ட பொருட்களை எடுத்து செல்வது, பெண் பயணிகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை தடுக்கும் விதமாக, நேற்று ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் ஆய்வு நடந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சென்ற ரயில்களிலும் சோதனை நடந்தது. இன்ஸ்பெக்டர் அணில் தலைமையில் போலீஸார் இப்பணியில் ஈடுபட்டனர். ரயில்வே விதிமுறை மீறிய 28 பயணிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதம் நடந்த சோதனையில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


