ADDED : செப் 14, 2011 03:58 AM
வத்ராயிருப்பு, : ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கூமாப்பட்டி நோக்கி நேற்று இரவு 8.15 மணிக்கு அரசு டவுன் பஸ் சென்றது.
சேஷாபுரம் அருகே, மர்மகும்பல் பஸ் மீது கற்களை வீசியது. முன் பக்க கண்ணாடிகள் சேதமடைந்தன. டிரைவர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இதனால், அப்பகுதியில் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே, இப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இதுவரை ஐந்துமுறை பஸ்கள் மீது கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது.