ADDED : ஜூலை 31, 2011 01:06 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் விவசாயி குடும்பத்தை தாக்கிய வாதலிபரை போலீஸார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி அடுத்த சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் விவசாயி அன்னியப்பன்.
இவரது மனைவி சின்னப்பாப்பா. இவர்களுக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சேட்டு (37) என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார்.நேற்று முன்தினம் நிலத்தை காலி செய்துவிட்டு தன்னிடம் ஒப்படைக்குமாறு அன்னியப்பன், சின்னப்பாப்பா மற்றும் இவர்களது மகன் முத்துசாமி ஆகியோர் சேட்டுவிடம் கேட்டுள்ளார்.இதற்கு சேட்டு மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சேட்டு அன்னியப்பன் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரையும் தாக்கியுள்ளார். காயமடைந்த மூன்று பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பர்கூர் எஸ்.ஐ., கோவிந்தசாமி விசாரித்து சேட்டுவை கைது செய்தார்.


