ADDED : ஆக 01, 2011 01:38 AM
திருவண்ணாமலை: வந்தவாசியில் நேற்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், எட்டு குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.
அதில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. வந்தவாசி டவுன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் இவரது வீடு நேற்று அதிகாலை 5மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது, தீ மளமளவென பரவி அருகே இருந்த அன்சர், ஷேக்பத்ரித், ஜாபர், காதர்பாட்ஷா, சமீன், காலேஷ் ஆகியோரது குடிசை வீடுகளுக்கும் பரவியது. இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் வீடுகளிலிருந்த தங்க நகைகள், ரொக்கப் பணம், டி.வி.,க்கள், பீரோக்கள், துணிகள் எரிந்து நாசமாயின. இதன் மொத்த மதிப்பு சுமார் 5லட்சம் ரூபாயாகும். இது குறித்து வந்தவாசி தெற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்