/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/அரசியல் தலையீட்டை ஏற்க இயலாது: சங்க மாநில தலைவர் சகிலன் பேச்சுஅரசியல் தலையீட்டை ஏற்க இயலாது: சங்க மாநில தலைவர் சகிலன் பேச்சு
அரசியல் தலையீட்டை ஏற்க இயலாது: சங்க மாநில தலைவர் சகிலன் பேச்சு
அரசியல் தலையீட்டை ஏற்க இயலாது: சங்க மாநில தலைவர் சகிலன் பேச்சு
அரசியல் தலையீட்டை ஏற்க இயலாது: சங்க மாநில தலைவர் சகிலன் பேச்சு
நாகர்கோவில் : கேபிள் ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அரசியல் தலையீட்டை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக கேபிள் டி.வி.
கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் சகிலன் பேசியதாவது: அரசு கேபிள் டி.வி.,யை தமிழக அரசு துவங்கியதற்கு முழு ஆதரைவு அளித்து வருகிறோம். கேபிள் தொழிலில் நடத்தப்பட்ட ஏகபோக அராஜகத்திற்கு முடிவு கட்டப்பட்டது வரவேற்கத்தக்கது. கேபிள் டி.வி. தொழிலை நம்பி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்நிலையில் உரிய முறையில் கேபிள் ஆபரேட்டர்களின் நிலையை தெரிவிக்கும் வகையில் அரசு அழைத்து பேசவில்லை என்ற வருத்தம் உள்ளது. கடந்த காலத்தில் காட்டிய அலட்சியத்தை நினைக்கும்போது தற்போதைய நிலையில் பரவாயில்லை என்ற சிந்தனையுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் இன்னும் அரசு கேபிள் செயல்படாத நிலை உள்ளது. அரசு கேபிள் அலுவலகம் ஆளும் கட்சியினரின் அலுவலகமாக மாறிவிட்டது. தமிழக கேபிள் ஆபரேட்டர்களுக்கு எவ்வளவு பிரச்னை வந்தாலும் சரி, அவற்றை எதிர்கொள்ளும் சக்தியாக நமது சங்கம் மாறும். 20 ஆண்டுகாலமாக இத்தொழிலில் முதலீடு செய்து உழைத்து வரும் கேபிள் ஆபரேட்டர்களை பலர் மிரட்டும் நிலை இன்று உள்ளது. அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
கேபிள் இணைப்பு ஒன்றுக்கு அரசு கேபிளில் ரூ.70 பெறப்படுகிறது. இதில் ஆபரேட்டர்களுக்கு ரூ.48 கிடைக்கிறது. இதை பொதுக்குழு எதிர்க்கிறது. தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்களை பாதுகாக்கவேண்டியது அரசின் கடமை. அரசியல் ஆதாயம் தேடுபவர்கள், அரசியல் சாயம் பூசி செயல்படுவோர் போன்றோருக்கு ஆதாயங்களை பிடுங்கி கொடுப்பதை அனுமதிக்க முடியாது. கேபிள் ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் அரசியல் தலையீட்டை எச்சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது. அராஜகம் செய்தவர்கள் எல்லாம் தற்போது சென்னை அரசு கேபிள் டி.வி. வாசலில் தவம் கிடக்கும் நிலை உள்ளது. இவ்வாறு சகிலன் பேசினார். கூட்டத்தில் மரணமடைந்த கேபிள் ஆபரேட்டரின் குடும்பத்திற்கு நிதியுதவியை சகிலன் வழங்கினார்.
மாநில தீர்மானம்: கூட்டத்தில், அரசு கேபிள் டி.வி.யில் பேச்சுவார்த்தை மூலம் கட்டண சேனல்களை பேச்சுவார்த்தை மூலம் பெற்று செயல்படுத்தி வரும் அரசு கேபிள் டி.வி. கார்பரேசனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அரசு கேபிளில் இணைப்புக்கு பெறும் ரூ.70 கட்டணத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். மத்திய அரசின் டிராய் ஆய்வின்படி ஒரு இணைப்புக்கு ரூ.82, மற்றும் 10.2 சதவீத சேனல் வரியை அரசு கேபிள் கார்பரேசனில் செயல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒரு இணைப்புக்கு அடிப்படை கட்டணம் ரூ.100 என நிர்ணயம் செய்யவேண்டும். கேபிள் தொழிலில் அரசியல் தலையீடு கூடாது. கேபிள் தொழில் வாழ்வாதாரத்தை வலியுறுத்தி நவம்பர் 15ம் தேதி மாநிலம் முழுவதும் இருந்து கேபிள் ஆபரேட்டர்கள் சென்னை கோட்டை நோக்கி பயணம் செய்வது. கேபிள் ஆபர÷ட்டர்களுக்கு 1 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வட்டியில்லாத கடன் வழங்கவேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் கேபிள் டி.வி. உபகரணங்களை நியாயமான விலையில் வழங்கவேண்டும். இந்தியா முழுவதும் சுமார் 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சுயவேலைவாய்ப்புடன் செயல்பட்டுவரும் கேபிள் டி.வி. ஆபரேட்டர் தொழில் அழியா வண்ணமும், டி.டி.எச். கோடீஸ்வர முதலாளிகளை மத்திய அரசு பாதுகாக்கும் சூழலில் தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரில் டி.டி.எச்.சிற்கு 30 சதவீத வரி விதித்ததற்கு தமிழக அரசிற்கு வரவேற்பையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்வது.
தமிழக அரசு கேபிள் டி.வி. கார்பரேசன் 500க்கும் மேற்பட்டவர்களை புதிதாக மாவட்டம்தோறும் பணிக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ஏற்கனவே பணியாற்றும் ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது. 20 ஆண்டுகளாக சொந்த முதலீட்டில் சுயதொழில் புரிந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபரேட்டர்களும், அவர்களை சார்ந்த 2.5 லட்சம் குடும்பங்களையும் பாதுகாக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் அமையவேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆபரேட்டர்களை மிரட்டும் போக்கு தற்போதும் தொடர்கிறது : செய்தியாளர்களிடம் சகிலன் தெரிவிக்கையில்; அரசு கேபிள் கார்பரேஷன் வந்தபின்பும் மதுரை, கோவை, சென்னை, திருநெல்வேலி போன்ற பல பகுதிகளில் கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்படும் நிலை தொடர்கிறது. பல இடங்களில் அரசு கேபிள் டி.வி. செயல்படவில்லை. மறைமுகமாக பழைய இணைப்புகளே தொடர்கிறது. இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். உள்ளூர் தொலைக்காட்சி சானல்களை முடக்கக்கூடாது. ஏற்கனவே ஒளிபரப்பான உள்ளூர் சானல்களை ஒளிபரப்பவேண்டும். அதை நம்பி பல தொழிலாளர்கள் உள்ளனர். குறைந்த பட்சம் அரசு கேபிளில் ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கவேண்டும். இந்நிலையில் அரசு கேபிள் வந்த பிறகும் கோவையில் ரூ.350, திருச்சியில் ரூ.250, மதுரை பகுதியில் ரூ.350 என்று தன்னிச்சையாயக கட்டணம் நிர்ணயம் செய்து தனியார் கேபிள் நிர்வாகங்கள் கெடுபிடி பண்ணும் நிலை உள்ளது. இதற்கு அரசியல் சாயம் பூசாமல் பாரபட்சமின்றி தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.