/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காரைக்குடி அரசு ஐ.டி.ஐ., யில் ரூ.3.6 கோடியில் கட்டுமான பணிகாரைக்குடி அரசு ஐ.டி.ஐ., யில் ரூ.3.6 கோடியில் கட்டுமான பணி
காரைக்குடி அரசு ஐ.டி.ஐ., யில் ரூ.3.6 கோடியில் கட்டுமான பணி
காரைக்குடி அரசு ஐ.டி.ஐ., யில் ரூ.3.6 கோடியில் கட்டுமான பணி
காரைக்குடி அரசு ஐ.டி.ஐ., யில் ரூ.3.6 கோடியில் கட்டுமான பணி
ADDED : ஜூலை 15, 2011 10:04 PM
காரைக்குடி : காரைக்குடி அரசு ஐ.டி.ஐ., திறன்மிகு பயிற்சி மையமாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து 3.5 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் மணி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அமராவதிபுதூரில் செயல்பட்டு வரும் காரைக்குடி அரசு ஐ.டி.ஐ., யில் கடைசலர், இயந்திரவேலையாள், கட்டுமானம் உள்ளிட்ட தொழிற் பிரிவுகளில் ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
கடந்த ஆக., 2008ம் ஆண்டு திறன்மிகு தொழிற்பயிற்சி மையமாக தரம் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து, கட்டுமானம் (பொருத்துனர் மற்றும் பற்றவைப்பவர்) என்ற புதிய தொழிற்பிரிவு தொடங்கப்பட்டு, மத்திய அரசு மூலம் 3.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள நிதியில் மூன்று வகுப்பறைகள், பயிற்சிக்கு தேவையான இயந்திரங்கள் புதிதாக வாங்கப்படவுள்ளன. இப்பணியை நிலைய மேலாண்மை குழு தலைவர் மோகன் தலைமையில் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர், என்றார்.


