/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஓசூரில் பைக் மோதியதில்ஏட்டு உள்ளிட்ட 2 பேர் காயம்ஓசூரில் பைக் மோதியதில்ஏட்டு உள்ளிட்ட 2 பேர் காயம்
ஓசூரில் பைக் மோதியதில்ஏட்டு உள்ளிட்ட 2 பேர் காயம்
ஓசூரில் பைக் மோதியதில்ஏட்டு உள்ளிட்ட 2 பேர் காயம்
ஓசூரில் பைக் மோதியதில்ஏட்டு உள்ளிட்ட 2 பேர் காயம்
ADDED : ஆக 03, 2011 01:05 AM
ஓசூர்: ஓசூர் ஜுஜுவாடி செக் போஸ்ட்டில் மாமூலுக்காக பைக்கை வழிமறித்தாக
நினைத்த வாலிபர், போலீஸ் ஏட்டு மீது பைக்கை ஏற்றினார். இதில், ஏட்டும்,
வாலிபரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.ஓசூர் சிப்காட் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக மாதேஷ்வரன்
பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஜுஜுவாடி செக்
போஸ்ட்டில் அந்த வழியாக சென்ற பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி
சோதனை செய்தார்.அப்போது, அத்திப்பள்ளியில் இருந்து ஓசூரை நோக்கி வந்த
நாகராஜ் (29) என்பவர் வந்துள்ளார். ஏட்டு மாதேஸ்வரன், அவரது பைக்கை கை
காட்டி மறித்தார். வழக்கம் போல் மாமூலுக்காக பைக்கை நிறுத்துவதாக நினைத்து,
நாகராஜ் பைக்கை நிறுத்தாமல் சென்றார்.போலீஸ் ஏட்டு விடாப்பிடியாக பைக்கை
வழிமறித்த போது, நாகராஜ் பைக்கை ஏட்டு மீது ஏற்றினார். இதில், இருவரும்
கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். காயமடைந்தனர். ஏட்டு சேலம் தனியார்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த நாகராஜ் ஓசூர் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜுஜுவாடி செக் போஸ்ட்டில் மாலை முதல்
இரவு வரை போலீஸார் பைக்கில் வருகிறவர்களை குறி வைத்து சோதனை செய்வதை
வழக்கமாக கொண்டுள்ளனர். பைக்கில் வருபவர்கள் பெரும்பாலும், கர்நாடகா
மாநிலம் அத்திப்பள்ளியில் குடித்துவிட்டு குடிபோதையில் வாகனத்தை ஓட்டி
வருவதால், போலீஸாருக்கு பயந்து பைக்கை நிறுத்தி மாமூல் வழங்கி செல்வார்கள்.
அதே போல், நேற்றும் போலீஸ் ஏட்டு மாமூலுக்காக பைக்கை நிறுத்துவதாக
நினைத்து வாலிபர் பைக்கை ஏட்டு மீது ஏற்றிய சம்பவம் ஓசூர் போலீஸ்
வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


