/உள்ளூர் செய்திகள்/சேலம்/சட்டக்கல்லூரி மாணவர் மறியலால் பரபரப்புசட்டக்கல்லூரி மாணவர் மறியலால் பரபரப்பு
சட்டக்கல்லூரி மாணவர் மறியலால் பரபரப்பு
சட்டக்கல்லூரி மாணவர் மறியலால் பரபரப்பு
சட்டக்கல்லூரி மாணவர் மறியலால் பரபரப்பு
ADDED : ஆக 12, 2011 01:29 AM
சேலம்: கல்விக் கடன் தர மறுத்த வங்கியை கண்டித்து, சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள், சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடம் வந்த போலீஸ் துணை கமிஷனர் சத்யபிரியாவை, மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
சேலம் சட்டக்கல்லூரியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் ஸ்ரீதர். மேச்சேரியைச் சேர்ந்த இவர், இறுதியாண்டு படித்து வருகிறார். மாணவர், தான் வசிக்கும் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில், கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். சேலத்தில் உள்ள மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு, அங்குள்ள வங்கி நிர்வாகம் கூறியது. அதையடுத்து, சேலம் கோட்டை பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு வந்து, கல்விக் கடன் கேட்டுள்ளார். அதற்கு சரியான முறையில் அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை என, கூறப்படுகிறது. இந்த தகவல், மற்ற மாணவர்களுக்கு தெரியவந்தது. நேற்று சட்டக்கல்லூரி மாணவர்கள், 50க்கும் மேற்பட்டோர், இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால், சரிவர பதில் கிடைக்காததால், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸ் துணை கமிஷனர் சத்யபிரியாவை, மாணவர்கள் முற்றுகையிட்டு, கல்வி கடன் வழங்க வங்கி நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும் என, கூறினர். இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


