Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/"வழி தெரியாம வாஷர்மேன் கூட போனா விடிய விடிய வெள்ளாவி வைக்கணும்'- இரா.செந்தில் குமார்

"வழி தெரியாம வாஷர்மேன் கூட போனா விடிய விடிய வெள்ளாவி வைக்கணும்'- இரா.செந்தில் குமார்

"வழி தெரியாம வாஷர்மேன் கூட போனா விடிய விடிய வெள்ளாவி வைக்கணும்'- இரா.செந்தில் குமார்

"வழி தெரியாம வாஷர்மேன் கூட போனா விடிய விடிய வெள்ளாவி வைக்கணும்'- இரா.செந்தில் குமார்

PUBLISHED ON : செப் 04, 2011 12:00 AM


Google News

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கி மீண்டும் வேதாளத்தைத் தேடிப் போகையில், ''நண்பா, என்னைத் தேடி மரத்துக்குப் போகாதே; 'லேண்ட் அபேஸ் கேசுல லேட்டஸ்ட்டா அரெஸ்ட்' ஆன தலைவருகளுக்காக, என்னை மாதிரி தொண்டருங்க எல்லாம் ஆர்ப்பாட்டம், போராட்டம்னு ஆரம்பிச்சுருவோமோன் னு எங்களைப் போலீசு தேடுது.

'ஸோ' நான் தலைமறைவா இருக்கேன். என்னைக் கட்டாயம் பார்க்கணும்னா வட்டச் செயலாளர் வீட்டுக்கு வா'' என்று எஸ்.எம்.எஸ் வந்தது.

விக்கியின் 'இன்னோவா' வட்டச் செயலாளர் வீட்டுக்குப் பறந்தது. அங்கு 'புல்' பாட்டிலும், புறாக் கறியுமாக அமர்ந்திருந்த வேதாளம், விக்கியைப் பார்த்ததும் வா நண்பா, போகுற போக்கப் பாத்தா, போலீஸ் கஸ்டடியில இருந்தா கூட போன் போட்டுக் கதை கேப்ப போல இருக்கே.

எவனையோ பினாமியாக்கி, யாரோ, தன்னோட பொண்டாட்டி, புள்ளை, குட்டி, பேரன் பேத்திகளுக்கு சொத்து சேர்த்ததுக்காக நாங்க போலீசுக்கு பயந்து பதுங்கிக் கிடக்க வேண்டியிருக்கு நண்பா. அவங்க பொறந்த நாளுக்கு போஸ்டர் ஒட்டறதுல இருந்து அவங்க பொண்டாட்டிக வளைகாப்புக்கு வளையல் வாங்கி ஊர் பொண்ணுகளுக்கு போட்டு வுடுறது வரைக்கும் அவங்களுக்காகவே வாழுற எங்க பேர்ல ஒரு இடம் வாங்கி போட்டிருந்தா கூட நாங்க பயப்படுறதுல ஒரு நியாயம் இருக்கு.

அவங்க புள்ளைங்களுக்கு ஒரு பிரச்னைன்னா, தீக்குளிச்சதும் நாங்கதான். அவங்க பதவிக்கு ஒரு சிக்கல்ன்னா பஸ் எரிச்சதும் நாங்கதான். வாழ்க்கை பூரா இப்படி அவங்க குடும்பத்துக்காவே உழைச்சதுக்காக இப்பவும் ஓட வேண்டி இருக்கு. 'வழி தெரியாம வாஷர்மேன் கூட போனா வெடிய வெடிய வெள்ளாவி வெக்கணும்'னு சும்மாவா சொன்னாங்க. இந்த தலைவனுங்களை நம்பி, இன்னைக்கு நானே நொந்து நூடுல்சாகி உக்காந்துட்டு இருக்கேன். இனிமே என்னால இவங்களுக்காக எங்கயும் ஓட முடியாது நண்பா.

'ஹெட்டுக்கு மேல ஃப்ளட்டு போனதுக்கப்பறம் மீட்டர் போனா என்ன கிலோ மீட்டர் போனா என்ன'ங்கற முடிவோடதான் இருக்கேன். ஆனாலும், ஒரு பக்கம் போலீசு கேசுன்னு நெனைக்கும் போது, ஈரக் கொலையெல்லாம் நடுங்குது; இன்னொரு பக்கம் 'தலைவனுக்காக சிறை செல்லாத தறுதலை'னு வரலாறு நம்மளை வசை பாடீருமோன்னும் பயமா இருக்கு.

கோடி கோடியா திருடுனவன் மீடியாவப் பார்த்து சிரிக்கிறான்; அவனுக்கு கொடி புடிச்சவன் போலீசுக்கு பயந்து ஒழியறான். தலைவருங்களுக்கு மட்டும் எப்புடி அந்த தைரியம் வருது? தொண்டனுகளுக்கு ஏன் அந்தத் தைரியம் வர்றதில்லை? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிஞ்சும் சொல்லலேன்னா உன் தலை வெடிக்கும்'' என்றது வேதாளம்.

'தலைவருங்க உள்ளே போனா, ஏ.சி ரூமும், ஓசில குவாட்டரும் கிடைக்கும், உங்களுக்குக் கிடைக்குமா? அவங்க நெனைச்சா, சிறைக்குள்ள இருந்தே சின்ன வீட்டுக்கும் பெரிய வீட்டுக்கும் பேச முடியும், உங்களால முடியுமா? கோழி கறியும் கொத்து பரோட்டாவும் அவங்களுக்கு வரும், உங்களுக்கு?

தொண்டர்களைப் பொறுத்தவரைக்கும், காசிருந்தாதான் பெயிலு; இல்லேன்னா ஜெயிலு. நீங்க உள்ளார போனா அச்சடிச்ச சோறு; அவுன்சு கிளாசுல மோரு. சாயந்தரம் செல்லு; காலையில டல்லுன்னு வாழ்க்கையே வீணா போயிருமப்பா.

அவங்க உள்ள போனா நியூசு; நீங்க போன பப்ளிக் நியூசன்சு; அவங்க ஜீப்புல ஏறுனா ஊரே பத்தி எரியும். நீங்க ஜீப்புல ஏறுனா உங்களைப் பெத்தவங்க வயிறுதான் பத்திகிட்டு எரியும்.

நீங்க வெளிய வந்தா,

'பாளையங் கோட்டை சிறையினிலே,

பாம்புகள் பலவின் நடுவினிலே

அஞ்சாமல் இருந்தவர் யாரு ?

அந்த தொண்டரின் புகழினைப் பாடு' அப்படின்னு யாராவது பாடுவாங்களா என்ன? இல்லையே; அப்பறம் எப்படித் தொண்டனுக்கு அந்த தைரியம் வரும்?'' என்ற விக்கியின் பதிலால் அவன் மௌனம் கலைந்தது; வேதாளம் பறந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us