/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அரசு கல்லூரி அமைவது எங்கே? : இடம் தேர்வில் குழப்பம்அரசு கல்லூரி அமைவது எங்கே? : இடம் தேர்வில் குழப்பம்
அரசு கல்லூரி அமைவது எங்கே? : இடம் தேர்வில் குழப்பம்
அரசு கல்லூரி அமைவது எங்கே? : இடம் தேர்வில் குழப்பம்
அரசு கல்லூரி அமைவது எங்கே? : இடம் தேர்வில் குழப்பம்
ADDED : ஆக 02, 2011 11:31 PM
சாத்தூர் : சத்தூர் மேட்டமலையில் துவங்கிய அரசு கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வில் குழப்பம் நீடிக்கிறது.
சத்தூர் மேட்டமலை பி.எஸ். என்.எல்.(பி.எட்)கல்லூரியில் தற்காலிகமாக துவங்கப்பட்டுள்ள காமராஜர் பல்கலை உறுப்புக்கல்லுரிக்கான கட்டடத்தை ,இந்த ஆண்டுக்குள் கட்டி அடுத்த ஆண்டு முதல் புதிய கட்டடத்தில் செயல்படும் வகையில்,இதற்காக பல்கலை ஆட்சி மன்றக்குழு எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. மாவட்டத்தில் முதல் அரசு கல்லூரி என்பதால் இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் உள்ளது . கடந்த 23 ல் நடந்த மாணவர் சேர்க்கை ஆர்டர் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சிவகாசி ரோட்டில் சின்னக்காமன்பட்டி அருகே தடையாணை மந்தைவெளி நிலம், இருக்கன்குடி சாலை ஆட்டுப்பண்ணைக்கு சொந்தமான இடத்தை கலெக்டர் பாலாஜியுடன் ஆய்வு செய்தார். ஆட்டுப்பண்ணை இடம் சாத்தூர் தொகுதி எல்லையில் உள்ளதாலும்,சின்னக்காமன்பட்டி நிலத்தை பயன்படுத்த முடியாத நிலையில், தொகுதிக்குள் இடம் ஆய்வு செய்ய அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.அதன்படி தற்போது தாகுதியில் உள்ள வெம்பக்கோட்டை, தாயில்பட்டி,ஆலங்குளம், சத்திரபட்டி பகுதிகளில் கல்லூரி கட்ட இடம் உள்ளதா என ,வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.இதனால் கல்லூரிக்கு இடம் தேர்வில் குழப்பம் நீடிக்கிறது.