மதுரை தி.மு.க., பிரமுகர்களிடம் விசாரணை
மதுரை தி.மு.க., பிரமுகர்களிடம் விசாரணை
மதுரை தி.மு.க., பிரமுகர்களிடம் விசாரணை
UPDATED : ஜூலை 19, 2011 04:28 PM
ADDED : ஜூலை 19, 2011 01:30 PM
மதுரை: நில மோசடி செய்ததாக மதுரை தி.மு.க., பிரமுகர்களிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
திருமங்கலம் அருகே செங்குளத்தை சேர்ந்தவர் சிவனாண்டி இவரது மனைவி பாப்பா. இவர்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துள்ளதாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த நேரில் ஆஜராக வருமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இன்று மதுரை நகர் செயலர் தளபதி திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கொடி சந்திரசேகர், சுரேஷ் பாபு ஆகியோரிடம் மதுரை எஸ்.பி., அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது. இங்கு பதட்டம் ஏற்பட்டதால் எஸ்.பி., அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


