/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சுய உதவி குழுக்கள் தொழில் முனைவுவெளிநாட்டு பிரதிநிதிகள் ஆய்வுசுய உதவி குழுக்கள் தொழில் முனைவுவெளிநாட்டு பிரதிநிதிகள் ஆய்வு
சுய உதவி குழுக்கள் தொழில் முனைவுவெளிநாட்டு பிரதிநிதிகள் ஆய்வு
சுய உதவி குழுக்கள் தொழில் முனைவுவெளிநாட்டு பிரதிநிதிகள் ஆய்வு
சுய உதவி குழுக்கள் தொழில் முனைவுவெளிநாட்டு பிரதிநிதிகள் ஆய்வு
ADDED : ஜூலை 11, 2011 02:57 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், சுய உதவி குழுக்களின் செயல்பாடுகளை
வெளிநாட்டு தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பார்வையிட்டு பாராட்டு
தெரிவித்தனர்.தர்மபுரி அடுத்த கெட்டூர், மாமரத்துப்பள்ளம், காசிகாரன்பள்ளம்,
எட்டியாம்பட்டி, பேடரஅள்ளி ஆகிய இடங்களில் ஸ்பீடு தொண்டு நிறுவனங்களின்
சார்பில், சுய உதவிக்குழுவினரின் கோழி வளர்ப்பு, பாக்குமட்டை தயாரித்தல்,
கற்றாழை நார் கயிறு திரித்தல், புளி பதப்படுத்துதல், மலர் சாகுபடி உள்ளிட்ட
பல்வேறு தொழில்களை பார்வையிட்டனர்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட
இயக்குனர் ரவிச்சந்திரன், மகளிர் திட்ட அலுவலர் சத்யபாலன் ஆகியோர் தலைமை
வகித்து வெளிநாட்டு பிரதிநிதிகளை அழைத்து சென்றனர்.
தேசிய ஊரக வளர்ச்சி
நிறுவனம் ஐதராபாத் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் சீதாராமன் பிரதிநிதிகளை வழி
நடத்தினார்.
எகிப்து, நேபாளம், லாவோ, தான்சானியா, தாய்லாந்து, ஆப்கானிஸ்தான், மொரிஸியஸ்
ஆகிய நாடுகளை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
உதவி திட்ட அலுவலர்கள் அமல்ராஜ், அரிச்செல்வம், கள அலுவலர்கள் உமையாள்,
செல்வராஜ், பொன்னரசன், சுந்தர்ராஜன், பி.டி.ஓ.,க்கள் சற்குணம், பாலு,
கிருஷ்ணன், ஸ்பீடு தொண்டு நிறுவன துணை தலைவர் பெருமாள், செயலாளர் சரவணன்,
பொருளாளர் அறிவழகன், சி.சி.டி., இயக்குனர் சிவராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


