/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வள்ளலார் மன்றத்தில் ஆடி மாத பூச விழாவள்ளலார் மன்றத்தில் ஆடி மாத பூச விழா
வள்ளலார் மன்றத்தில் ஆடி மாத பூச விழா
வள்ளலார் மன்றத்தில் ஆடி மாத பூச விழா
வள்ளலார் மன்றத்தில் ஆடி மாத பூச விழா
ADDED : ஆக 02, 2011 01:03 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஆடி மாத பூச விழா நடந்தது.
சங்கராபுரம் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் திருச்சபையில் நடந்த விழாவிற்கு
வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். நாராயணன், வைத்திலிங்கம்,
பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர்
முத்துகருப்பன் வரவேற்றார். மன்ற பூசகர்கள் முருகேச அடிகள், சிவஞான அடிகள்
முன்னிலையில் அகவல் படித்து உலக நலனிற்காக பிரார்த்திக்கப்பட்டது. ஓய்வு
பெற்ற வி.ஏ.ஓ., சுப்ரமணியன் கொன்று விடு, வென்று விடு என்ற தலைப்பில்
பேசினார்.விழா அமைப்பாளர்கள் கல்யாணி, சிவகாம சுந்தரி, மீனாட்சி ஆகியோர்
வள்ளலார் மன்றத்திற்கு பாத்திரங்கள் வழங்கினர்.