/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஒரே நாளில் 1,729 பேர் வேட்புமனு இன்றும், நாளையும் மனுக்கள் குவிய வாய்ப்புஒரே நாளில் 1,729 பேர் வேட்புமனு இன்றும், நாளையும் மனுக்கள் குவிய வாய்ப்பு
ஒரே நாளில் 1,729 பேர் வேட்புமனு இன்றும், நாளையும் மனுக்கள் குவிய வாய்ப்பு
ஒரே நாளில் 1,729 பேர் வேட்புமனு இன்றும், நாளையும் மனுக்கள் குவிய வாய்ப்பு
ஒரே நாளில் 1,729 பேர் வேட்புமனு இன்றும், நாளையும் மனுக்கள் குவிய வாய்ப்பு
ADDED : செப் 28, 2011 12:41 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 729 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதுவரை மொத்தம் 4 ஆயிரத்து 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் சூடுபிடித்து கொண்டிருக்கிறது. நேற்று தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 18 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 176 பேர், கிராம ஊராட்சி தலைவருக்கு 310 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 844 பேர், மாநகராட்சி கவுன்சிலருக்கு 60 பேர், நகராட்சி தலைவருக்கு 3 பேர், நகராட்சி கவுன்சிலருக்கு 86 பேர், டவுன் பஞ்சாயத்து சேர்மனுக்கு 27 பேர், டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு 205 பேர் சேர்த்து மொத்தம் ஆயிரத்து 729 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 967 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிட ஏற்கனவே 2 ஆயிரத்து 280 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று ஆயிரத்து 729 பேர் சேர்த்து மொத்தம் 4 ஆயிரத்து 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்றும், நாளையும் வேட்புமனு தாக்கல் செய்து கொள்ளலாம். இரண்டு நாளில் வேட்புமனு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.