/உள்ளூர் செய்திகள்/சேலம்/நேற்று நல்ல நாள் இல்லைவெறிச்சோடிய அலுவலகம்நேற்று நல்ல நாள் இல்லைவெறிச்சோடிய அலுவலகம்
நேற்று நல்ல நாள் இல்லைவெறிச்சோடிய அலுவலகம்
நேற்று நல்ல நாள் இல்லைவெறிச்சோடிய அலுவலகம்
நேற்று நல்ல நாள் இல்லைவெறிச்சோடிய அலுவலகம்
ADDED : செப் 29, 2011 01:49 AM
ஆத்தூர்: நேற்று நல்ல நாள் இல்லை என்பதால், உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு
தாக்கல் செய்ய, அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் யாரும்
வரவில்லை. அதனால், தேர்தல் அலுவலகங்கள் வெறிச்சோடியது.தமிழக உள்ளாட்சி
தேர்தல், அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது.
பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் கடந்த, 22ம் தேதி முதல் வேட்புமனு
தாக்கல் செய்து வருகின்றனர்.நேற்று முன்தினம் 'மஹாளய அமாவாசை' என்பதால்,
அ.தி.மு.க., தே.மு.தி.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சுயேட்சை
வேட்பாளர்கள் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், நேற்று
அமாவாசைக்கு அடுத்த நாள் 'வெறுமானம்' என்பதால், ஆத்தூர் பகுதியில், அரசியல்
கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல்
செய்ய வரவில்லை. அதனால், நகராட்சி, யூனியன் உள்ளிட்ட அலுவலகங்கள்
வெறிச்சோடியது.வேட்பு மனு தாக்கல் செய்ய ஒருவர் கூட வராததால், தேர்தல்
அலுவலர்கள், உதவி அலுவலர்கள், தங்களது வழக்கமான பணிகளை மேற்கொண்டனர்.


