/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இந்திரா நகர் தேர்தல் பார்வையாளர் வேட்பாளர், கட்சிகளுடன் ஆலோ ச னைஇந்திரா நகர் தேர்தல் பார்வையாளர் வேட்பாளர், கட்சிகளுடன் ஆலோ ச னை
இந்திரா நகர் தேர்தல் பார்வையாளர் வேட்பாளர், கட்சிகளுடன் ஆலோ ச னை
இந்திரா நகர் தேர்தல் பார்வையாளர் வேட்பாளர், கட்சிகளுடன் ஆலோ ச னை
இந்திரா நகர் தேர்தல் பார்வையாளர் வேட்பாளர், கட்சிகளுடன் ஆலோ ச னை
ADDED : செப் 30, 2011 01:56 AM
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான பார்வையாளர் (பொது)
முகம்மது மஹ்தாப் உதீன் அகமது, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுடன்
நேற்று ஆலோசனை நடத்தினார்.
தொழிலாளர் துறை வளாகத்தில் உள்ள தேர்தல்
நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தேர்தல் நன்னடத்தை
விதிகளைக் கடைபிடிக்குமாறும், தேர்தலை அமைதியான முறையில் நடத்த
ஒத்துழைக்குமாறும் அரசியல் கட்சியினரை தேர்தல் பார்வையாளர் கேட்டுக்
கொண்டார். தேர்தல் நன்னடத்தை விதி மீறல் குறித்த புகார்களை வேட்பாளர்கள்,
அரசியல் கட்சிகள், பொது மக்கள் தன்னிடம் கொடுக்கலாம் எனவும் கூறினார்.
மேலும், தேர்தல் நியாய மாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் கமிஷன்
விதிமுறைகளும், வழிகாட்டுதலும் கடுமையாகப் பின்பற்றப்படும். செலவு
கணக்குகளை உரிய முறையில் அதற்குண்டான படிவத்தில் பராமரித்து, உரிய
அதிகாரியிடமும், தேர்தல் கமிஷன் பார்வையாளர்களிடமும் காண்பித்து
சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என கூறினார். தேர்தல் நடத்தும் அதிகாரி
மலர்க்கண்ணன், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஜனார்த்தனன், தாசில்தார்
யஷ்வந்தையா, அரசியல் கட்சிகள் சார்பில் பகுஜன் சமாஜ் வைத்தியநாதன், இந்திய
கம்யூ., கண்ணன், காங்., சிபி, அ.தி.மு.க., அன்பழகன், காசிநாதன்,
என்.ஆர்.காங்., தமிழ்ச்செல்வன், ஜெயபால், இந்திய ஜனநாயகக் கட்சி சண்முகம்,
சுயேச்சை வேட்பாளர்கள் தமிழ்ச்செல்வம், வீரராகவன் ஆகியோர் கலந்து
கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன்
எம்.எல்.ஏ., பேசுகையில், வேட்பு மனு தாக்கலின்போது, என்.ஆர். காங்.,
கட்சியினர் விதிமுறைகளை மீறி உள்ளனர். அதன் மீது என்ன நடவடிக்கை
எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.