கேரள கழிவுகள் ஏற்றி வரும் லாரிகள் தேனி மாவட்டத்திற்குள் நுழைய தடை
கேரள கழிவுகள் ஏற்றி வரும் லாரிகள் தேனி மாவட்டத்திற்குள் நுழைய தடை
கேரள கழிவுகள் ஏற்றி வரும் லாரிகள் தேனி மாவட்டத்திற்குள் நுழைய தடை
ADDED : ஆக 17, 2011 01:09 AM
தேனி : கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வரும் லாரிகள், தேனி மாவட்டத்திற்குள் நுழைய, தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து மருந்துக் கழிவுகள், மருத்துவமனை உயிர் கழிவுகள், மீன், கோழி கழிவுகள், மக்காத குப்பையை லாரிகளில் ஏற்றிக் கொண்டு, நள்ளிரவில் தேனி மாவட்டத்திற்குள் வந்து, ஏதாவது ஒரு கிராமப் பகுதிகளில் கொட்டி விட்டுச் செல்கின்றனர். இக்கழிவுகளால் துர்நாற்றமும், சுற்றுப்புறச் சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுவதோடு, தொற்றுநோய்களும் பரவுகின்றன.
கடந்த வாரம், ஓடைப்பட்டி அருகே கள்ளபட்டியில் செயல்படும் பன்றி வளர்ப்புக் கூடத்திற்கு, கேரளாவில் இருந்து கோழி, மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை, போலீசார் பறிமுதல் செய்தனர். பழனிச்சாமி என்பவரை, கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அந்த பன்றி வளர்ப்புக் கூடத்தை, கேரளாவிற்கு மாற்ற உத்தரவிட்ட மாவட்ட நிர்வாகம், கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வரும் லாரிகள், உள்ளே நுழையத் தடை விதித்தது. தேனி எஸ்.பி., பிரவீண்குமார், கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசாரை நியமித்து, கழிவுகள் ஏற்றி வரும் லாரிகளை, 24 மணி நேரமும் கண்காணித்து, கேரளாவிற்கு திருப்பியனுப்ப உத்தரவிட்டுள்ளார்.