/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/தாய்க் குத்திக்கொலை மகன் சிறையிலடைப்புதாய்க் குத்திக்கொலை மகன் சிறையிலடைப்பு
தாய்க் குத்திக்கொலை மகன் சிறையிலடைப்பு
தாய்க் குத்திக்கொலை மகன் சிறையிலடைப்பு
தாய்க் குத்திக்கொலை மகன் சிறையிலடைப்பு
ADDED : ஜூலை 19, 2011 12:38 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனை மருவத்தூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரியலூர் மாவட்டம் ராவுத்தன்பட்டி நரிக்குறவர் காலணி பகுதியை சேர்ந்தவர் ராஜூ மனைவி சலவராணி (50). நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர். இவர் நேற்றுமுன்தினம் மதியம் 12 மணியளவில் தனது மகன் ராஜன் (30) மற்றும் உறவினர்களுடன், பெரம்பலூர் அருகே மலையப்பநகரில் தனது உறவினர் இறந்த துக்க காரியத்திற்கு அரியலூரிலிருந்து ஒரு டாடா ஏசி வேனில் வந்தார். வேனில் உட்காருவதற்கு இடம் இல்லாததால் ஜெயராணி என்பவர் மட்டும் நின்றுகொண்டு வந்ததாக தெரிகிறது. இதையறிந்த ஜெயராணி உறவினர்களான சந்திரபாபு (39), ஆனந்தபாபு (40) ஆகிய இருவரும் ஹீரோ ஹோண்டா டூவீலரில் வந்து சாத்தனூர் கிராமத்திற்கும், அய்யலூர் கிராமத்திற்கும் இடையே வேனை வழிமறித்து ராஜனிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆத்திரமடைந்த ராஜன், தன்னிடம் தகராறில் ஈடுபட்ட ஆனந்தபாபுவை கத்தியால் குத்த முயன்றதாக தெரிகிறது. இதை சலவராணி தடுக்க வந்தபோது அந்த சலவராணியின் கழுத்தில் குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சலவராணியை 108 ஆம்பலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சலவராணி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து சலவராணியை கத்தியால் குத்தி கொலை செய்த ராஜனை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.