Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/விசுவக்குடி நீர்த்தேக்க திட்டம் விரைந்து முடிக்க வலியுறுத்தல்: தே.மு.தி.க., தீர்மானம் நிறைவேற்றம்

விசுவக்குடி நீர்த்தேக்க திட்டம் விரைந்து முடிக்க வலியுறுத்தல்: தே.மு.தி.க., தீர்மானம் நிறைவேற்றம்

விசுவக்குடி நீர்த்தேக்க திட்டம் விரைந்து முடிக்க வலியுறுத்தல்: தே.மு.தி.க., தீர்மானம் நிறைவேற்றம்

விசுவக்குடி நீர்த்தேக்க திட்டம் விரைந்து முடிக்க வலியுறுத்தல்: தே.மு.தி.க., தீர்மானம் நிறைவேற்றம்

ADDED : ஜூலை 25, 2011 02:00 AM


Google News

பெரம்பலூர்: 'விசுவக்குடி நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து நிø றவேற்ற, தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டு ம்' என, தே.மு.தி.க., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வே ப்பந்தட்டை ஒன்றிய தே.மு .தி.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் செல்லபிள்ளை தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சீனிவெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் கங்காதரன், கண்ணுசாமி, சுடர்செல்வன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் துரை காமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தீர்மானங்களை விளக்கி பேசினார்.

கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் ஓட்டுபோட்ட பொதுமக்கள் மற்றும் தேர்தல் பணியாற்றிய கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது, ஆக., 25ம் தேதி தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, அனைத்து கிளைகளிலும் கட்சி கொடியேற்றி, ஏழை, எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பது, பெரம்பலூரிலிருந்து, வேப்பந்தட்டை வழியாக ஆத்தூருக்கு கூடுதலாக பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். வேப்பந்தட்டையில் அரசு மருத்துவமனை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விசுவக்குடி நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.

அன்னமங்கலம், விசுவக்குடி வழியாக செல்லும் அரசு பஸ்சை, வேப்பந்தட்டை வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டமாந்துறை முதல், விஜயகோபாலபுரம் வரை தார்சாலை அமைக்க வேண்டும். வி.ஆர்.எஸ்.எஸ்., புரம் பகுதியில் உள்ள மின் கம்பங்களிலிருந்து செல்லும் மின்வயர்கள் மிகவும் தாழ்வானப் பகுதியில் உள்ளதால், விபத்து நிகழும் சூழ்நிலை உள்ளது. இதை தவிர்க்க மின்வாரிய அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட இணை செயலளர் சிவாஐயப்பன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் விஸ்வா, மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிதுரை, ரெங்கராஜ், பார்த்தீபன், ரவிக்குமார், செல்லதுரை, துறைமங்கலம் புனிதராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us