/உள்ளூர் செய்திகள்/கடலூர்/எங்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்எங்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்
எங்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்
எங்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்
எங்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்
ADDED : அக் 12, 2011 01:10 AM
விருத்தாசலம் : ''அ.தி.மு.க.,வும்., தி.மு.க., வும் எங்களை மாறி, மாறி
புறக்கணித்துள்ளன'' என வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி.,
பேசினார். விருத்தாசலம் நகர மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் மக்கள்
ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராஜாமுகமதுவை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள்
கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., விருத்தாசலம் பெரியார் நகரில்
பேசியதாவது: இந்தத் தேர்தலில் நீங்கள் விடுதலை சிறுத்தைகளுக்கு
வாக்களிப்பதால் ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்கள் ஆட்சியில் இருந்து
இறங்கிவிடப் போவதும் இல்லை. ஆட்சியை இழந்தவர்கள் மீண்டும் ஆட்சியை
கைப்பற்றப் போவதும் இல்லை. கடந்த 2006 தேர்தலில் எங்களை கூட்டணியில்
சேர்த்து 234 தொகுதிகளிலும் எங்கள் ஓட்டு வங்கியைப் பயன்படுத்திக் கொண்ட
அ.தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலில் எங்களை ஓரம் கட்டியது. கடந்த ஐந்து
ஆண்டுகளாக தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் பணியாற்றி 234
தொகுதிகளிலும் நாங்கள் தி.மு.க., கூட்டணிக்கு பாடுபட்டோம்.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்து விடுதலை
சிறுத்தைகளையும், தோழமை கட்சிகளையும் தி.மு.க., புறக்கணித்தது. இப்படி
அ.தி.மு.க., வும், - தி.மு.க.,வும் மாறி, மாறி புறக்கணிக்கின்றன. பெரிய
கட்சிகளுக்கே வாய்ப்பு அளிக்கும் நீங்கள் எங்கள் கட்சிக்கும் வாய்ப்பு
அளியுங்கள். இவ்வாறு திருமாவளவன் எம்.பி., பேசினார்.


