/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தேவிபட்டணத்தில் பா.ஜ., பொதுக்கூட்டம்தேவிபட்டணத்தில் பா.ஜ., பொதுக்கூட்டம்
தேவிபட்டணத்தில் பா.ஜ., பொதுக்கூட்டம்
தேவிபட்டணத்தில் பா.ஜ., பொதுக்கூட்டம்
தேவிபட்டணத்தில் பா.ஜ., பொதுக்கூட்டம்
ADDED : ஜூலை 24, 2011 01:34 AM
சிவகிரி : தேவிபட்டணத்தில் பா.ஜ.,சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.மத்திய அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தேவிபட்டணத்தில் பா.ஜ.,சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
காந்திஜி கலையரங்கில் நடந்த கூட்டத்திற்கு கோவிந்தன் தலைமை வகித்தார். முன்னாள் கிளை தலைவர் பாரதி, உரக்கடை தங்கராஜ், புத்திரகொண்டான் முன்னிலை வகித்தனர். கிளை பொருளாளர் பூமராஜன் வரவேற்றார்.கூட்டத்தில் பா.ஜ.,மாநில செயலாளர் பழனிவேல்சாமி, மாவட்ட பார்வையாளர் குமரேச சீனிவாசன், மாவட்ட தலைவர் பாண்டித்துரை, மாவட்ட அமைப்பு செயலாளர் ராமராஜ், மாவட்ட இளைஞரணி முத்துராஜ், வாசு., ஒன்றிய தலைவர் சாமித்துரை, அமைப்பு செயலாளர் கனகராஜ், மாவட்ட துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய பார்வையாளர் மாடசாமி, கிளை நிர்வாகிகள் முருகன், லிங்கம், சரவணக்குமார், அண்ணாமலைச்சாமி, மாடசாமி, ராஜசேகர், சுந்தர்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.கிளை தலைவர் லிங்கராஜா நன்றி கூறினார்.