ADDED : ஆக 09, 2011 02:44 AM
விழுப்புரம் : இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம்(இப்கோ), கூட்டுறவு துறை மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் இணைந்து இலவச மண் பரிசோதனை முகாமை நடத்தின.செஞ்சி அடுத்த கொங்கம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த முகாமிற்கு இப்கோ நிறுவன வேலூர் மண்டல முதுநிலை மேலாளர் வரூர் தலைமை தாங்கினார்.
மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றார். கூட்டுறவுத்துறை கண்டமங்கலம் கள அலுவலர் வேணு முன்னிலை வகித்தார். இப்கோ உரங்கள், கூட்டுறவு சேவைகள் மற்றும் வேளாண் பணிகளை விளக்கி இப்கோ கள அலு வலர் உலகுசுந்தரம் பேசினார். வேளாண்மை அலுவலர் ராஜ்குமார் மண்பரிசோதனை செய்வதன் அவசியம் பற்றியும், மண்மாதிரி சேகரிப்பதன் முக்கயத்துவம் குறித்தும் விளக்கவுரையாற்றினார்.முன்னதாக, மண் மாதிரி சேகரிக்கும் முறைகள் பற்றி இப்கோ நிறுவனத்தின் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக ஒருங்கிணைப்பாளர் கலியபெருமாள், சுதாகர் செயல் முறை விளக்கம் செய்து காண்பித்தனர். முகாமில் 80 மண் மாதிரிகளை ஆய்வு செய்யப்பட்டது. கொங்கம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தனி அலுவலர் ஜெயச்சந்தர், இப்கோ ஏர்டெல் நிறுவன அலுவலர் மொய்தீன் பங் கேற்றனர். கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.


