/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கல்வி உதவித்தொகை கிடைக்காமல் பள்ளி மாணவ, மாணவியர் தவிப்புகல்வி உதவித்தொகை கிடைக்காமல் பள்ளி மாணவ, மாணவியர் தவிப்பு
கல்வி உதவித்தொகை கிடைக்காமல் பள்ளி மாணவ, மாணவியர் தவிப்பு
கல்வி உதவித்தொகை கிடைக்காமல் பள்ளி மாணவ, மாணவியர் தவிப்பு
கல்வி உதவித்தொகை கிடைக்காமல் பள்ளி மாணவ, மாணவியர் தவிப்பு
ADDED : செப் 08, 2011 10:07 PM
திருப்பூர் : 'பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை சரியான நேரத்தில்
வழங்கப்படுவதில்லை,' என, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். எஸ்.சி., -
எஸ்.டி., மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் கல்வி
உதவித்தொகையை அரசு வழங்கி வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும், கல்வியாண்டின்
துவக்கத்தில் மாணவர்களிடம் விண்ணப்பம் பெற்று, அரசிடம் அறிக்கை
சமர்ப்பிக்கப்படும். விண்ணப்பங்களை பரிசீலித்து, உதவித்தொகைக்காக
விண்ணப்பித்தவர்களுக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்றவாறு, 1,000, 1,250,
1,750 என கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்துக்கு
உட்பட்ட சில பள்ளிகளில் கல்வி உதவித்தொகைக்காக கடந்தாண்டு விண்ணப்பித்த
மாணவர்களுக்கு இன்னும் உதவித்தொகை கிடைக்கவில்லை என பெற்றோர் புகார்
தெரிவித்துள்ளனர். பெற்றோர் கூறுகையில், 'மாணவர்கள் படிப்பு
செலவிற்காகத்தான் அரசு உதவித்தொகை வழங்குகிறது. கடந்த கல்வியாண்டில்
விண்ணப்பித்ததற்கான தொகை இன்னும் வழங்கப்படவில்லை. பள்ளிகளில் சென்று
கேட்டால், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வரவில்லை என்கின்றனர். கலெக்டர்
அலுவலகத்தில் கேட்டால், பள்ளிகளுக்கு வழங்கி விட்டோம்
என்கின்றனர்.'மாணவர்களின் படிப்புக்காக வழங்கப்படும் தொகை கிடைக்காமல்
போவது மாணவர்களை பாதிக்கிறது. பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பள்ளி படிப்பை
முடித்தபிறகும் கூட, கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுக்கு
முன்புவரை, அரையாண்டு தேர்வுக்கு முன்பாகவே இத்தொகை வழங்கப்பட்டு விடும்.
கடந்தாண்டில் இருந்து தாமதமாகி வருகிறது,' என்றனர்.


