Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/செப்., 10ல் ஊர்க்காவல் படை வீரர் சேர்க்கை

செப்., 10ல் ஊர்க்காவல் படை வீரர் சேர்க்கை

செப்., 10ல் ஊர்க்காவல் படை வீரர் சேர்க்கை

செப்., 10ல் ஊர்க்காவல் படை வீரர் சேர்க்கை

ADDED : செப் 07, 2011 01:49 AM


Google News
பெரம்பலூர்: 'பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் சேர்க்கை செப்., 10ம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது' என மாவட்ட போலீஸ் எஸ்.பி., ரூபேஸ்குமார் மீனா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல்படை பிரிவுக்கு ஊர்க்காவல் படை வீரர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்ற ஆரோக்கியமான 20 வயது முதல் 45 வயது வரையுள்ள ஆண், பெண் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் செப்., 10ம் தேதி காலை 10 மணிக்குள் தங்களது கல்விச்சான்றிதழ்கள் மற்றும் உண்மை நகலுடன் நேரில் ஆஜராக வேண்டும். ஊர்க்காவல் படையில் சேர விரும்புவோர் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும், இந்திய நாட்டை சேர்ந்தவராகவும், அரசியல் கட்சியில் தொடர்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும். ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்படுவோர் மூன்றாண்டு கட்டாயம் தொடர்ந்து வருகை தர வேண்டும். தேர்வு நாள் அன்று பயணப்படி வழங்கப்பட மாட்டாது. தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு அரசு இலவச சீருடை மற்றும் 35 நாளுக்கு கவாத்து பயிற்சி அளிக்கப்படும். ஊர்க்காவல் படையில் சேர்வதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் இப்பணியில் சேர்ந்து பயன்பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us